லாட்டரி சீட்டு, சூதாடிய 4 பேர் கைது
- ரோந்து பணியில் சிக்கினர்
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ் பெக்டர் சுபாஷினி மற்றும் போலீசார் நேற்று நாட்டறம்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது வெளி மாநில லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நாட்டறம்பள்ளி மகாத்மா காந்தி தெருவை சேர்ந்த ஆனந்தன் (வயது 52), நேரு தெருவை சேர்ந்த முருகேசன் (58) ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் கள் வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்- இன்ஸ்பெக்டர் சுபாஷினி மற்றும் போலீசார் நாட்டறம் பள்ளி மற்றும் அதனை சுற்றி யுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப் போது சுண்ணாம்பு குட்டை பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது சூதாடிக் கொண்டிருந்த லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த கமலநாதன் (வயது 62), வேட்டப்பட்டு வட்ட கொல்லை பகுதியை சேர்ந்த மூர்த்தி (47) ஆகிய இருவரையும் பிடித்து கைது செய்தனர். இதுதொடர்பாக் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.