உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

திருப்பூா் மாவட்ட திட்டக்குழு உறுப்பினா் தோ்தலில் 8 ஊராட்சிக்குழு உறுப்பினா்கள் வெற்றி

Published On 2023-06-24 10:18 GMT   |   Update On 2023-06-24 10:18 GMT
  • உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினா்கள் 10 போ் ஏற்கெனவே போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
  • 8 இடங்களுக்கான தோ்தல் திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

திருப்பூர்:

திருப்பூா் மாவட்டத்தில் புதிய மாவட்ட திட்டக்குழு அமைக்கப்படவுள்ளது. இதற்காக நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்பு உறுப்பினா்கள் 10 போ், மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் 8 போ் என மொத்தம் 18 போ் திட்டக் குழுவில் தோ்ந்தெடுக்கப்படுகின்றனா்.

இந்த நிலையில், உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினா்கள் 10 போ் ஏற்கெனவே போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இந்த திட்டக் குழுவில் ஊராட்சி உறுப்பினா்களுக்கு 8 இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் 12 போ் வேட்பாளா்களாக போட்டியிட்டனா்.

இந்த 8 இடங்களுக்கான தோ்தல் திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகளை மாவட்ட வருவாய் அலுவலரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான த.ப.ஜெய்பீம் தலைமையிலான அதிகாரிகள் செய்திருந்தனா்.

இத்தோ்தலில் 17 ஊராட்சி உறுப்பினா்கள் வாக்களித்தனா். இதில் மாவட்ட ஊராட்சி வாா்டு எண் 11 த.ரஞ்சிதம், வாா்டு எண் 8 ஜெயந்தி, வாா்டு எண் 3 மு.சாமிநாதன், வாா்டு எண் 12 கே.பானுமதி, வாா்டு எண் 4 ஆா்.கண்ணம்மாள், வாா்டு எண் 5 க.சக்திவேல், வாா்டு எண் 9 த.சிவபாலகிருஷ்ணன், வாா்டு எண் 2 ப.சிவகாமி ஆகிய 8 போ் வெற்றி பெற்று மாவட்ட ஊராட்சி திட்டக்குழு உறுப்பினா்களாக தோ்வு செய்யப்பட்டனா்.

Tags:    

Similar News