உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

அரசு பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு

Published On 2022-11-22 07:23 GMT   |   Update On 2022-11-22 07:23 GMT
  • சிறப்பு வகுப்புகள் மூலம் கூடுதல் கவனம் செலுத்தி, 100 சதவீத தேர்ச்சிக்கு வகை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • குறைந்தபட்ச கற்றல் கையேடு, வினா வங்கி ஆகியவற்றை பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக வெளியிட வேண்டும்.

திருப்பூர் : 

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முழு பாடத்திட்டத்தில் இருந்து அரையாண்டு தேர்வுக்கான வினாக்கள் கேட்கப்படும். பொது வினாத்தாள் பாணியில் இத்தேர்வு நடத்தப்படும். தேர்வுக்கு இன்னும் 3வாரங்களே உள்ள நிலையில் பாடங்களை முடிக்க, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் இரண்டாம் பருவ தேர்வு முடிவுகளை ஆய்வுக்கு உட்படுத்த, தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பாடத்தில் அதிக மாணவர்கள் தோல்வியை தழுவியிருந்தால், உடனடியாக சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியை தழுவியோருக்கு பாடங்களை பகுதி பகுதியாக பிரித்து, சிறு சிறு தேர்வுகள் நடத்த வேண்டும். சிறப்பு வகுப்புகள் மூலம் கூடுதல் கவனம் செலுத்தி, 100 சதவீத தேர்ச்சிக்கு வகை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து திருப்பூர் மாவட்ட அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சிலர் கூறுகையில், அரையாண்டு தேர்வு நெருங்கியுள்ள நிலையில் பாடத்திட்ட அழுத்தம் காரணமாக கல்வியில் பின்தங்கிய மாணவர்கள், படிக்க பெரிதும் சிரமப்படுகின்றனர். புளூ பிரின்ட் வெளியிடாததால் முக்கிய பகுதிகளை மட்டும் படிக்க வைக்க முடிவதில்லை. குறைந்தபட்ச கற்றல் கையேடு, வினா வங்கி ஆகியவற்றை பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக வெளியிட்டால் பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.

Tags:    

Similar News