உள்ளூர் செய்திகள்

ஒற்றை கொம்புடன் சுற்றிய யானை.

துரிஞ்சிகுப்பம் பகுதியில் ஒற்றை கொம்புடன் சுற்றித் திரியும் யானை

Published On 2022-07-13 09:32 GMT   |   Update On 2022-07-13 09:32 GMT
  • முகாம் அமைத்து கண்காணிப்பு
  • பொதுமக்கள் அச்சம்

செங்கம்:

செங்கம் அருகே உள்ள ஜவ்வாதுமலை அடிவாரத்தில் உள்ள துரிஞ்சிகுப்பம் பகுதியில் ஒற்றைக் கொம்புடைய யானை ஒன்று நேற்று முன்தினம் இரவு முதல் சுற்றி திரிந்து வருகிறது.

இந்த ஒற்றை கொம்பு யானையை கண்ட அப்பகுதி மக்கள் செங்கம் வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.

இதை தொடர்ந்து துரிஞ்சிகுப்பம் பகுதிக்கு விரைந்து சென்ற வனத்துறை அதிகாரிகள் அப்பகுதியில் சுற்றித்திரிந்த ஒற்றைக்கொம்பு யானையை கண்காணித்து வருகின்றனர். மேலும் துரிஞ்சிகுப்பம், கல்லாத்தூர், ஊர்கவுண்டனூர் உள்ளிட்ட பகுதி பொதுமக்களுக்கு டாம்டாம் மூலம் இரவு நேரங்களில் வெளியில் வரக்கூடாது எனவும் ஒற்றைக் கொம்பு யானை நடமாட்டத்தால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் இந்த ஒற்றைக் கொம்பு காட்டு யானை ஜவ்வாதுமலை பகுதியில் கடந்த 10 வருடங்களாக சுற்றி வருவதாகவும் குறிப்பாக ஆலங்காயம், ஜமுனாமரத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 10 வருடங்களாக சுற்றி வந்துள்ளது. மேலும் தற்போது முதல் முறையாக செங்கத்தை ஒட்டி உள்ள ஜவ்வாது மலை அடிவாரத்தில் உள்ள துரிஞ்சிகுப்பம் பகுதிக்கு இந்த ஒற்றை கொம்பு யானை வழித்தடம் மாறி வந்துள்ளதாகவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செங்கம் வனத்துறை ரேஞ்சர் பழனிசாமி தலைமையில் வனத்துறை அலுவலர்கள் துரிஞ்சிகுப்பம், கல்லாத்தூர், ஊர்கவுண்டனூர் உள்ளிட்ட பகுதிகளில் முகாம் அமைத்து ஒற்றைக்கொம்பு யானையை கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

Similar News