உள்ளூர் செய்திகள்
பூமிக்கு அருகில் வரும் வியாழன் கிரகத்தை டெலஸ்கோப் மூலம் காட்டிய வாலிபர்
- பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் பார்த்தனர்
- பொதுமக்கள் பாராட்டு
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த இரும்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ்(35). பட்டதாரியான இவர் சிறுவயதில் முதல் வானிலை ஆராய்ச்சி செய்வதில் ஆர்வம் காட்டினார்.
இந்த நிலையில் ரூ.3 லட்சம் செலவில் அதிநவீன டெலஸ்கோப் வாங்கி 58 ஆண்டுகளுக்குப் பிறகு வியாழன் கிரகம் பூமிக்கு அருகில் வருவதை படம் பிடித்து காண்பித்தார்.
மேலும் வியாழன் கிரகம் பூமிக்கு அருகில் வருவதை பள்ளி மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் வீட்டின் மாடியில் டெலஸ்கோப் வைத்து காண்பித்தார்.
மேலும் மோயகன்ராஜ் இத்தகைய வானிலை ஆராய்ச்சி செய்து மாணவர்களுக்கு வழிகாட்டியாக செய்து வரும் இச்செயலை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.