உள்ளூர் செய்திகள்

போலீசாரிடம் முறையிடும் ரெயில் பயணிகள்.

திருச்சி- காரைக்கால் ரெயில் பயணிகள் போலீசாரிடம் முறையீடு

Published On 2023-05-03 09:46 GMT   |   Update On 2023-05-03 09:46 GMT
  • பராமரிப்பு பணி நடைபெறுவதால் தஞ்சாவூரோடு ரெயில் நிறுத்தப்பட்டது.
  • காரைக்கால் ரெயிலில் பயணம் செய்வதற்காக கட்டணம் வசூலித்துள்ளனர்.

தஞ்சாவூர்:

திருச்சியில் இருந்து காரைக்காலுக்கு பயணிகள் ரெயில் தினமும் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் திருச்சியில் இருந்து காலை 10.30 மணிக்கு புறப்படும் ரெயில் மட்டும் தஞ்சாவூர் வரை மட்டுமே செல்கிறது. கடந்த இரண்டு வாரங்களாக இந்த நிலைமை நீடித்து வருகிறது.

இந்த சூழ்நிலையில் இன்று காலை 10:30 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்ட ரெயிலில் ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர்.

பராமரிப்பு பணி நடைபெறுவதால் தஞ்சாவூ ரோடு ரயில் நிறுத்தப்பட்டது.

இதையடுத்து அதில் இருந்து இறங்கிய பயணிகளில் 25-க்கும் மேற்பட்டோர் ரெயில்வே போலீசாரிடம் முறையி ட்டனர்.

எங்களுக்கு காரைக்கால் வரை செல்வதற்கு டிக்கெட் கட்டணம் வசூலி க்கப்பட்டுள்ளது.

ஆனால் தஞ்சாவூரோடு ரயில் நிறுத்தப்பட்டது என்றனர்.

அதற்கு போலீசார், பராமரிப்பு பணியால் இரண்டு வாரங்களாக திருச்சியில் இருந்து காலை 10.30 மணிக்கு புறப்படும் ரெயில் மட்டும் காரைக்கால் செல்லாமல் தஞ்சாவூர் வரை மட்டுமே செல்கிறது.

பணிகள் சில நாட்களில் முடிவடைந்து விடும். பின்னர் வழக்கம்போல் காரைக்கால் வரை செல்லும். உங்களுக்கு தஞ்சாவூரில் இருந்து வேறு நேரங்களில் செல்லும் காரைக்கால் ரெயிலில் பயணம் செய்வதற்காக கட்டணம் வசூலித்துள்ளனர்.

வேண்டுமென்றால் நீங்கள் கவுண்டரில் சென்று மீதமுள்ள பணத்தை வாங்கிக் கொள்ளலாம் என்றனர்.

இதைத் தொடர்ந்து அந்த பயணிகள் கவுண்டரில் சென்று மீதம் பணத்தை வாங்கிக் கொண்டு காரைக்கால் சென்றனர்.

Tags:    

Similar News