உள்ளூர் செய்திகள்

ரூ.13.80 கோடி மதிப்பீட்டில் பக்தர்கள் வரிசை வளாகம்

Published On 2023-05-10 07:51 GMT   |   Update On 2023-05-10 07:51 GMT
  • சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கட்டப்பட்டது
  • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்

மண்ணச்சநல்லூர்,

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் தமிழகத்தில் உள்ள சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற முதன்மை திருக்கோயிலாகும். இந்த கோவிலுக்கு நாள்தோறும் உள்ளூர் மற்றும் வெளியூர்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபாடு செய்கின்றனர்.இந்த கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களின் வசதிக்காக ரூ.13 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் கோவில் நிதியிலிருந்து பல்வேறு வசதிகளுடன் கூடிய பக்தர்கள் இருக்கையில் காத்திருந்து வரிசையில் தரிசனம் செய்ய வரிசை வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார், லால்குடி கோட்டாச்சியர் வைத்தியநாதன், துணை ஆட்சியர் ஐஸ்வர்யா (பெறுப்பு), வட்டாட்சியர் அருள் ஜோதி, மண்டல இணை ஆணையர் எஸ்.செல்வராஜ் ,கோவில் இணை ஆணையர் கல்யாணி, செயற்பொறியாளர் பி பெரியசாமி, சா.கண்ணனூர் பேரூராட்சி தலைவர் ஜி.பி.சரவணன், மற்றும் மணியக்காரர் பழனிவேல், கண்காணிப்பாளர் ஸ்டாலின் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இந்த வரிசை வளாகமானது வாகன நிறுத்துமிடம் உட்பட சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் ரூ.13 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த வரிசை வளாகத்தில் கட்டண வரிசை மற்றும் பொது தரிசனத்திற்கு தனித்தனி நுழைவு மண்டபங்கள் 4, காத்திருப்பு கூடம், பக்தர்கள் அமர்ந்து செல்லும் வகையில் கிரானைட் கற்களால் ஆன இருக்கைகள், திருக்கோயில் பயன்பாட்டிற்கான 8 கடைகள் தேங்காய் பழ கடை, வெள்ளி உருவார விற்பனை நிலையம், குங்கும்ம் விற்பனை நிலையம், பிரசாத விற்பனை நிலையம்,கட்டண சீட்டு விற்பனை மையம், புத்தக விற்பனை நிலையம், எஸ்.எஸ்.தடுப்புகள், கண்கவர் மின் விளக்குகள், மின் விசிறிகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 12 கழிவறைகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. பொருட்கள் வைப்பு அறை, நான்கு அவசர கால வழிகள் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளது.வரிசை வளாகத்திற்கு வெளியே பொருட்கள் பாதுகாப்பு அறை ஓட்டுநர் ஓய்வு அறைகள், பாதுகாவலர் கண்காணிப்பு அறை உணவகம், காலணிகள் பாதுகாப்பு மையம் ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளது. வெளிப்புறம் பூஜை பொருட்கள் மற்றும் சேவார்த்திகளுக்கு பயன்படக்கூடிய பொருட்கள் விற்பனை செய்ய 16 கடைகள் கட்டப்பட்டுள்ளது.இந்த வரிசை வளாகம் திறப்பு பக்தர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Tags:    

Similar News