உள்ளூர் செய்திகள்

திருச்சி விமான நிலையத்தில் கடந்த டிசம்பர் மாதம் வரை உள்நாட்டு சேவை மூலம் 3 லட்சத்து 40 ஆயிரம் பயணிகள் பயனடைந்துள்ளனர்-இயக்குனர் சுப்பிரமணி பேச்சு

Published On 2023-01-26 09:10 GMT   |   Update On 2023-01-26 09:10 GMT
  • திருச்சி விமான நிலையத்தில் கடந்த டிசம்பர் மாதம் வரை உள்நாட்டு சேவை மூலம் 3 லட்சத்து 40 ஆயிரம் பயணிகள் பயனடைந்துள்ளனர் என இயக்குனர் சுப்பிரமணி தெரிவித்துள்ளார்
  • புதிய விமான நிலைய முனைய கட்டுமான பணி–யானது நிறைவு பெற்று விரைவில் பயன்பாட்டிற்கு வர இருக்கிறது

கே.கே.நகர்:

திருச்சி விமான நிலை–யத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு விமான நிலைய இயக்குனர் சுப்பி–ரமணி தேசியக் கொடி–யினை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசிய–தாவது:- திருச்சி விமான நிலை–யத்தில் உள்நாட்டு விமான சேவைகளில் கடந்த டிசம்பர் மாதம் வரை 3 லட்சத்து 40 ஆயிரம் பயணிகள் பயன்பெற்றுள்ளனர்.

மொத்தமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணி–கள் உட்பட 12 லட்சத்து 28 ஆயிரம் பயணிகள் பயன்பெற்றுள்ளனர். திருச்சி விமான நிலை–யத்தில் இருந்து இயக்கப்பட்ட விமான சேவைகளின் எண்ணிக்கை 10,000 எனவும் இவை தவிர திருச்சி விமான நிலைய ஓடுதள விரிவாக்கமான டாக்ஸி ட்ராக் பணி நிறைவு பெற்று பயன்பாட்டிற்கு வர உள்ளது. மேலும் கார்கோ பிரி–வில் கடந்த டிசம்பர் மாதம் வரை 4,947 மெட்ரிக் டன் பொருட்கள் கையா–ளப்பட்டுள்ளது. மேலும் புதிய விமான நிலைய முனைய கட்டுமான பணி–யானது நிறைவு பெற்று விரைவில் பயன்பாட்டிற்கு வர இருக்கிறது.

இந்த புதிய முனையத்தில் ஒரு மணி நேரத்திற்கு 2900 பயணிகளை கையாளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் விமான நிலை–யத்தின் பாதுகாப்பில் முழு அக்கறையுடன் பணி–யாற்றி வரும் மத்திய தொழில் பாதுகாப்பு படை–யினர், விமான நிலைய ஆணைய அதிகாரிகள் மற்றும் விமான நிறுவன ஊழியர்கள் அனை–வருக்கும் நன்றி தெரி–வித்தார். விழாவில் மத்திய பாதுகாப்பு படை துணை கமிஷனர் ஹரி சிங் நயாள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News