உள்ளூர் செய்திகள் (District)

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் மங்களப் பொருட்கள் திருப்பதி பயணம்

Published On 2022-07-16 10:12 GMT   |   Update On 2022-07-16 10:12 GMT
  • ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் மங்களப் பொருட்கள் திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்டன
  • ஆனிவார ஆஸ்தான உற்சவத்தை முன்னிட்டு

திருச்சி:

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து திருப்பதி வேங்கடமுடையான் கோவிலுக்கு மங்களப்பொ ருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

திருவரங்கத்துக்கும், திருவேங்கடத்துக்கும் உள்ள தொடர்பு பாரம்பரியமிக்கது. மாற்றுமதத்தவரின் படையெடுப்பின் போது ஸ்ரீரங்கம் நம்பெருமாளை திருமலைக்கோவிலில் வைத்து சுமார் 40 ஆண்டுகள் பாதுகாத்தனர். இந்த நிகழ்வின் அடிப்படையில் திருமலைக்கும், திருவரங்க த்துக்கும் நீண்ட காலமாக மங்களபொருட்கள் பரிவ ர்த்தனை இருந்தது. எனினும் காலப்பேர்கில் அவை நின்று போயின.

இப்போது அவை மீண்டும் புதுப்பிக்கப்பட்டு வருகி ன்றன. அதன்படி திருப்பதி வேங்கடமுடையான் கோவிலில் இருந்து புதிய பட்டு வஸ்திரங்கள், மாலை, பச்சை கற்பூரம் உள்ளிட்ட மங்களப் பொருட்கள் ஸ்ரீரங்கம் கொண்டு வரப்பட்டு கார்த்திகை மாதம் நடக்கும் கைசிக ஏகாதசி விழாவில் ரெங்கநாதருக்கும், நம் பெருமாளுக்கும், தாயாரு க்கும், உடையவருக்கும் காணிக்கையாக சமர்ப்பிக்க ப்படும்.

இதே போல ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து பிரசாதம் வேங்கடமுடையான் கோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு ஆண்டுதோறும் ஆடிமாதப் பிறப்பன்று திருமலைக் ேகாவிலில் நடக்கும் ஆனிவார ஆஸ்தான உற்சவத்தன்று சமர்ப்பிக்கப்படும்.

நாளை (17-ந்தேதி) திருப்பதி வேங்கடமுடையான் கோவிலில் ஆனிவார ஆஸ்தான உற்வசம் நடக்கவுள்ளதால் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து வஸ்திரங்கள், மாலை, சந்தனம், பழங்கள் உள்ளிட்ட மங்களப் பொருட்கள் அடங்கிய பிரசாரத்துடன் கோவில் நிர்வாக அதிகாரியும், இணை ஆணையமான மாரிமுத்து தலைமையில் அர்ச்சகர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் திருப்பதிக்கு பயணமாகினர்.

இவை இன்று (16-ந்தேதி) இரவு திருப்பதி திருமலை கோவிலில் சமர்ப்பிக்கப்பட்டு நாளை (17-ந்தேதி) காலை மூலவர் வேங்கடமுடையான், உற்சவர் மலையப்பசாமி மற்றும் உடையவர் ராமா னுஜர் ஆகியோருக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளன. 

Tags:    

Similar News