உள்ளூர் செய்திகள் (District)

இலவச சித்த மருத்துவ முகாம்

Published On 2022-12-17 10:04 GMT   |   Update On 2022-12-17 10:04 GMT
  • இலவச சித்த மருத்துவ முகாம் நடந்தது
  • தெப்பக்குளம் லூர்து அன்னை ஆலயத்தில்

திருச்சி:

அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம் மற்றும் தமிழ்நாடு அக்குபஞ்சர் ரிசர்ச் கவுன்சில் சார்பில் 2,875-வது இலவச சித்த மருத்துவ முகாம் இன்று திருச்சி தெப்பக்குளம் லூர்து அன்னை ஆலயத்தில் உள்ள மதர் தெரேசா மக்கள் மன்றத்தில் நடந்தது. அனைத்திந்திய சித்த மருத்துவ சங்க தலைவர் டாக்டர் கே.எஸ். சுப்பையா பாண்டியன் முகாமினை தொடங்கி வைத்தார். ஜே.கே.சி. அறக்கட்டளை நிறுவனர் பா. ஜான் ராஜ்குமார், சுமதி பப்ளிகேஷன் வசந்தகுமார், பேராசிரியர் ரவி சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமினை புனித லூர்து அன்னை தேவாலயத்தின் பாதிரியார் சே.ச.மரிவளன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இதில் மருத்துவர்கள் இப்ராஹிம், கீதா கோபி கிருஷ்ணன், கல்பனா, ஆனந்த ஜோதி, கார்த்தி, சுபத்ரா, கணேசன், குமார், மதிகுமார், திருநாவுக்கரசு, ரேவதி, தமிழ்ச்செல்வி, ரபி அகமது, சையது ஹாசன், ராஜசேகரன் , மகேஷ், அஸ்மா, சந்தானம், சகுந்தலா மற்றும் பலர் கலந்து கொண்டு மருத்துவ சேவையாற்றினர்.

மேலும் நலவாழ்வு நற்பணி இயக்கத்தின் தலைவர் சந்திரசேகர், செயலாளர் அனித்தா ஆகியோர் வாழ்த்தி பேசினர். முடிவில் தமிழ்நாடு அக்குபஞ்சர் ரிசர்ச் கவுன்சிலில் மாநிலச செயலாளர் டாக்டர் எஸ். விஜய் கார்த்திக் நன்றி கூறினார். இதில் கால் வலி, தலைவலி, மூட்டு வலி உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு அக்குபஞ்சர் மருத்துவம் பார்க்கப்பட்டது. அது மட்டும் அல்லாமல் சளி, இருமல்,சத்து மருந்துகள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தி தரும் கபசுர குடிநீர் மருந்துகளும் வழங்கப்பட்டன. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Tags:    

Similar News