உள்ளூர் செய்திகள் (District)

அடிப்படை உரிமை சட்ட விழிப்புணர்வு முகாம்

Published On 2022-12-16 09:53 GMT   |   Update On 2022-12-16 09:53 GMT
  • அடிப்படை உரிமை சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது
  • கிராமப்புற மக்களுக்கு

திருச்சி:

இந்திய அரசு, இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம், திருச்சி மாவட்ட நேரு யுவ கேந்திரா, பதுவைநகர் டாக்டர் அம்பேத்கார் இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு மாணவர்கள் பயன்பெறும் வகையில் "மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் கடமைகள்" எனும் தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.

நிகழ்ச்சிக்கு நேரு யுவகேந்திரா திருச்சி மாவட்ட இளையோர் அலுவலர் சே.சுருதி தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் த.வீ.பத்ரிநாத் முன்னிலை வகித்தார். இந்திரா கணேசன் கல்வி நிறுவனத்தின் செயலர் பொறியாளர் க.ராஜசேகரன், இயக்குநர் ம.க.பாலகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

திருச்சி மாநகராட்சியின் துணை மேயர் திவ்யா தனக்கோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். இதில் வக்கீல் அமிழ்தினியன் கலந்துகொண்டு அடிப்படை சட்ட உரிமைகள், குழந்தைகளுக்குரிய கட்டாய கல்வி, மக்களுக்கான அடிப்படை உரிமைகள் குறித்து பேசினார்.

கல்லூரி உதவிப்பேராசிரியர் தேன்மொழி நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கினார். முன்னதாக ப.கௌதம் வரவேற்புரை ஆற்றினார். இதில் நேரு யுவகேந்திரா கணக்கு மற்றும் நிகழ்ச்சி உதவியாளர் மகேஸ்வரன், ஜெட்லீ புக் ஆப் ரெக்கார்டஸ் நிறுவனர் ஜெட்லீ, தீபலக்ஷ்மி, அருணாச்சலம், ஜான்சிராணி, ஹேமலதா, நிகில் குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். 

Tags:    

Similar News