முதல்-அமைச்சர் வாழ்க்கை வரலாறு புகைப்பட கண்காட்சியை பார்க்க திரளும் பொதுமக்கள்
- முதல்-அமைச்சர் வாழ்க்கை வரலாறு புகைப்பட கண்காட்சியை பார்க்க பொதுமக்கள் திரள்கின்றனர்
- இந்த கண்காட்சியில் சுமார் 400-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன
திருச்சி:
எங்கள் முதல்வர், எங்கள் பெருமை என்ற தலைப்பில் தமிழ்நாடு முதலமைச்சரின் வாழ்க்கை வரலாறு புகைப்பட கண்காட்சி திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் செயின்ட் ஜோசப் கல்லூரி வளாகத்தில் கடந்த வாரம் திறந்து வைக்கபட்டது. இந்த கண்காட்சியை கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர்.இந்த கண்காட்சியில் சுமார் 400-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.
அதில் டாக்டர் கருணாநிதி பங்கேற்ற மாநாட்டு புகைப்படங்கள், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற கூட்டங்கள் மற்றும் அரசு திட்டங்கள் என தி.மு.க.வின் வரலாற்றை நினைவுப்படுத்தும் விதமாக இந்த புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த புகைப்படங்களை திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழிகாட்டுதலின் பேரில், திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கிழக்கு தொகுதியைச் சார்ந்த கழக நிர்வாகிகள், கிழக்கு மாநகரக் கழகச் செயலாளர் மதிவாணன் தலைமையில் இன்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சரின் வாழ்க்கை வரலாறு புகைப்பட கண்காட்சியை கண்டு ரசித்தனர்.
இந்நிகழ்ச்சியில் பகுதிச்செயலாளர்கள் மோகன், பாபு, மணிவேல் ராஜ்முகம்மது, ஏ.எம்.ஜி.விஜயகுமார் மற்றும் மாவட்ட வழக்கறிஞர் அணி, மாவட்ட, மாநகர, நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு முதல்வரின் புகைப்பட கண்காட்சியை கண்டு களித்தனர்.