உள்ளூர் செய்திகள் (District)

கால்நடை மருத்துவ முகாம்

Published On 2022-12-24 08:14 GMT   |   Update On 2022-12-24 08:14 GMT
  • கால்நடை மருத்துவ முகாம் நடந்தது
  • 20க்கும் மேற்பட்ட நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசியும் போடப்பட்டது

திருச்சி:திருச்சி மணிகண்டம் ஒன்றியம்‌ சோமரசம்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட கீழவயலூர் கிராமத்தில் திருச்சி கால்நடை பராமரிப்பு துறை, ஸ்ரீரங்கம் கோட்டம் சார்பில் திருச்சி மண்டல இணை இயக்குனர் எஸ்தர் ஷீலா மற்றும் ஸ்ரீரங்கம் கோட்ட உதவி இயக்குனர் கணபதி பிரசாத் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் கால்நடை சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் மாடுகளுக்கு சினை பரிசோதனை, தொண்டை அடைப்பான், நோய் தடுப்பூசி, செயற்கை கருவூட்டல், ஆடுகளுக்கு துள்மாரி நோய் தடுப்பூசி, நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி, கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பூசி, சினை பிடிக்காத மாடுகளுக்கு தாது உப்பு கலவை போன்றவை வழங்கப்பட்டது. மேலும் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கால்நடை புலனாய்வுத்துறை ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன. முகாமில் பசுந்தீவன வளர்ப்பு குறித்த ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் சிறந்த கன்று, கால்நடை பராமரிப்பு விருது மற்றும் மேலாண்மை விருது ஆகிய விருதுகளை சோமரசம் பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் குணவதி துரைபாண்டியன் மற்றும் தி.மு.க. மத்திய மாவட்ட அமைப்பாளர் (விவசாய தொழிலாளர் அணி) துரைப்பாண்டியன் ஆகியோர் கால்நடை பராமரிப்பாளர்களுக்கு வழங்கினார். முகாமில் அதவத்தூர் கால்நடை உதவி மருத்துவர் சரவணன், ராம்ஜிநகர் கால்நடை உதவி மருத்துவர் விஜயராகவன், கால்நடை ஆய்வாளர்கள் கல்பனா, குரள்மணி, உதவியாளர்கள் காதர்பாட்ஷா, முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். முகாமில் 200 மாடுகள், 300 ஆடுகள், 500 கோழிகள் ஆகியவைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் 20க்கும் மேற்பட்ட நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசியும் போடப்பட்டது.

Tags:    

Similar News