உள்ளூர் செய்திகள்

சுவீடன் நாட்டு மாணவர்களுடன்திருச்சி போலீஸ் கமிஷனர்

Published On 2023-04-04 07:55 GMT   |   Update On 2023-04-04 07:55 GMT
  • கலந்துரையாடல் கல்வி, கலாச்சார பரிமாற்ற பயணம் மேற்கொண்டுள்ளனர்
  • தமிழக போலீசாரின் செயல்பாட்டிற்கு பாராட்டு

திருச்சி, 

சுவீடன் நாட்டில் 12ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர் கல்வி கலாச்சார பரிமாற்ற குழு பயணமாக இந்தியா வந்துள்ளனர். இந்தியாவின் பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அவர்கள் இந்தியாவின் கல்வி முறை மற்றும் கலாச்சாரங்கள் குறித்து பலதரப்பினருடன் கலந்து ரையாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சுவீடன் மாணவ குழுவினர் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியபிரியாவை சந்தித்தனர். சுவீடன் நாட்டை சேர்ந்த 3 ஆசிரியர்கள், அந்நாட்டில் 12ம் வகுப்பு பயிலும், 11 மாணவ, மாணவியர்கள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பு, குழந்தைகளின் கல்வி, இந்திய கல்வி, கலாச்சாரம், தமிழக காவல்துறையின செயல்பாடுகள், செஸ் ஒலிம்பியா உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு மாநகர கமிஷனர் பதிலளித்தார். மேலும் சுவீடன் மாணவர்களுடன், தனது பணி அனுவப வத்தையும் அவர் பகிர்ந்து கொண்டார்.இது குறித்து சுவீடன் பள்ளி மாணவர்கள் கூறும்போது, போலீஸ் கமிஷனருடன் கலந்துரையாடியது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அவரின் பேச்சில் இருந்து ஏராளமான குறிப்புகள் நாங்கள் எடுத்து உள்ளோம். தமிழக காவல்துறை மக்கள் நம்பிக்கை கொண்டு உள்ளதையும், பெருமை கொள்ளும் விதமாக செயல்படுவதையும் வியந்து கேட்டோம் என்று அவர்கள் கூறினார்கள்.

Tags:    

Similar News