- திருச்சி டைனமிக் ரோட்டரி கிளப் சார்பில் போலீசருக்கான கண் பரிசோதனை முகாம்
- சலுகை அடிப்படையில் அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
திருச்சி,
திருச்சி டைனமிக் ரோட்டரி கிளப்,
மேக்சி விஷன் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய போலீசருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் கிராப்பட்டி சிறப்பு காவல் படை அலுவலகத்தில் நடந்தது. முகாமினை சிறப்பு காவல் படை முதல் அணி கமாண்டன்ட் ஆனந்தன் தொடங்கி வைத்தார். டாக்டர் சிபு வர்க்கி குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
முகாமில் போலீசார் மற்றும் அவரது குடும்பத்தினர் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
இதில் விழித்திரை, கண்புரை உள்ளிட்ட கண் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அறுவை சிகிச்சை தேவைப்பட்ட
வர்களுக்கு சலுகை அடிப்படையில் அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை டைனமிக் ரோட்டரி சங்க தலைவர் ரேவதி மோகன் குமார், செயலாளர் சுதா பிரபாகரன், நிர்வாகி சந்திரலேகா விஜயாலயன் ,திட்ட தலைவர் கிருஷ்ணா கணேஷ்,நிகழ்ச்சி தலைவர் சலீமா ஆகியோர் செய்திருந்தனர்.