உள்ளூர் செய்திகள்

மண்ணச்சநல்லூர் பணிமனையில் இருந்து கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை

Published On 2023-09-22 06:50 GMT   |   Update On 2023-09-22 06:50 GMT
  • கூலி தொழிலாளர்கள் மண்ணச்சநல்லூர் பகுதிகளுக்கு தினசரி 500-க்கும் மேற்பட்டோர் சென்று வருகின்றனர்.
  • திருப்பைஞ்சீலி மற்றும் எதுமலை பகுதிகளுக்கு கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை

மண்ணச்சநல்லூர்,  

மண்ணச்சநல்லூர் பகுதியில் மகளிர் கலைக்கல்லூரி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அனைத்து துறை அலுவலகங்களும் செயல்பட்டு வருவதால் காலை மாலையில் பள்ளி கல்லூரி அலுவலகத்திற்கு செல்லும் அதிகாரிகள் உள்ளிட்டோர் போதுமான பேருந்து வசதிகள் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். மாணவ மாணவிகள் பள்ளி படிப்புகாகவும், பட்டப்படிப்பிற்காகவும், தொழில் சார்ந்த வியாபாரிகள், கூலி தொழிலாளர்கள் மண்ணச்சநல்லூர் பகுதிகளுக்கு தினசரி 500-க்கும் மேற்பட்டோர் சென்று வருகின்றனர். மேலும் சமயபுரம், திருப்பைஞ்சீலி எதுமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிகமான பள்ளி மாணவர்கள் படித்து வருவதால் போதுமான பேருந்து வசதியின்றி மாணவ மாணவிகள் தவித்து வருகின்றனர்.எனவே வீட்டிற்கு செல்வதில் மேலும் தாமதம் ஏற்படுவதால், மாவட்ட நிர்வாகமும், போக்குவரத்து துறையும் மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாலை நேரத்தில் மண்ணச்சநல்லூர் பணிமனையில் இருந்து சமயபுரம் திருப்பைஞ்சீலி மற்றும் எதுமலை பகுதிகளுக்கு கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் உடனடியாக சம்பந்தப்பட்ட போக்குவரத்து நிர்வாகம் தலையிட்டு பள்ளி கல்லூரி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து பகுதிகளுக்கும் கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். .

Tags:    

Similar News