உள்ளூர் செய்திகள் (District)

கோவை கணியூர் சுங்கசாவடியை முற்றுகையிட்டு லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்.

Published On 2023-04-01 09:30 GMT   |   Update On 2023-04-01 09:30 GMT
  • 29 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் இன்று முதல் உயர்ந்துள்ளது.
  • இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100க்கும் மேற்பட்டவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

நீலாம்பூர்,

தமிழகத்தில் 29 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் இன்று முதல் உயர்ந்துள்ளது. இந்த கட்டண உயர்வு நள்ளிரவு 12 மணி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்து வருகிறது.

கோவை மாவட்டம் சூலூர் கணியூர் சோதனை சாவடியில் சுங்க கட்டண உயர்வை கண்டித்து கோவை லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கோவை, திருப்பூர் மாவட்டத்தைச் சார்ந்த லாரி உரிமையாளர்கள் மற்றும் மினிலா அறிவு உரிமையாளர்கள் 100க்கும் மேற்பட்டவர் கணியூர் டோல்கேட் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு உடனடியாக கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். தொடர்ந்து கட்டண உயர்வை அதிகரித்து வரும் மத்திய அரசு பொதுமக்கள் மற்றும் லாரி உரிமையாளர்களை பேணி காக்க வேண்டும் எனவும் கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.

லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் முருகேசன் பேசும்போது, ஐந்திலிருந்து 25 சதவீதம் அளவிற்கு இந்த கட்டணம் உயர்ந்துள்ளது.

இந்த கட்டணம் உயர்ந்துள்ளதால் லாரி தொழில் செய்பவ ர்கள் மிகுந்த அளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். உடனடியாக இதனை திரும்ப பெற வேண்டும் உரிமையாளர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

Tags:    

Similar News