உள்ளூர் செய்திகள் (District)

லிங்கத்தடி கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி அமைத்து தர வலியுறுத்தல்

Published On 2023-01-20 08:06 GMT   |   Update On 2023-01-20 08:06 GMT
  • சுமார் 3 கி.மீ தூரம் நடந்து சென்று அரசு தொடக்கபள்ளிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
  • மழை காலங்களில் பேரிடர் மீட்பு முகாமாகவும் செயல்பட்டு கிராம மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

வேதாரண்யம்:

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் விவசாய பிரிவு மாநில பொதுச்செயலாளர் சுர்ஜித் சங்கர் முதல்-அமைச்சருக்கு அனுப்பி யுள்ள மனுவில் கூறியிருப்ப தாவது:-

நாகை மாவட்டம், தலைஞாயிறு ஒன்றியத்தில் வேளானிமுந்தல் கிராமம், முனீஸ்வரன் கோவில் தெரு, லிங்கத்தடி தெரு ஆகிய பகுதிகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு விவசாயமே பிரதான தொழில் ஆகும்.

இந்த 3 கிராமங்களிலும் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் அதிகம் உள்ளனர். இந்நிலையில், அவர்கள் படிப்பதற்கு ஒரு பள்ளிக்கூடம் கூட அப்பகுதியில் இல்லை.

அங்குள்ள குழந்தைகள் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்றால் சுமார் 3 கி.மீ தூரம் நடந்து சென்று சந்தானம் தெரு கிராமத்தில் இருக்கும் அரசு தொடக்கபள்ளிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

எனவே, இப்பகுதியில் ஒரு பள்ளி இருந்தால் குழந்தைகள் படிப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

மேலும், மழை காலங்களில் இப்பகுதி வெள்ள காடாக காட்சி அளிக்கும். அப்போது அப்பகுதி மக்கள் தங்கள் உடைமைகளோடு நீண்ட தொலைவில் உள்ள அரசு முகாம்களுக்கு தான் செல்ல வேண்டும்.

இதுவே, இப்பகுதியில் பள்ளி இருந்தால் மழை காலங்களில் பேரிடர் மீட்பு முகாமாகவும் செயல்பட்டு கிராம மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

எனவே, லிங்கத்தடி தெரு கிராமத்தில் பள்ளி அமைத்தால் 3 கிராமங்களில் இருந்து வரும் குழந்தைகளுக்கு அருகாமையில் இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News