உள்ளூர் செய்திகள்

ேகாவையில் வீரமாஸ்தியம்மன் கோவில் திருவிழா

Published On 2023-04-05 09:25 GMT   |   Update On 2023-04-05 09:25 GMT
  • திருவிழா கடந்த 28-ந் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
  • அக்னி சட்டி, சக்தி கரகம் எடுத்து வந்த பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்து சென்றனர்.

வடவள்ளி,

கோவை தொண்டாமுத்தூர் அடுத்த கெம்பனூர் அண்ணா நகரில் வீரமாஸ்தியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 28-ந் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து முகூர்த்தங்கால் நடுதல், காப்பு கட்டுதல், அக்னி கம்பம் நடும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

நேற்று சக்தி கரகம், அக்னி சட்டி ஊர்வலம், அம்மனை ஆற்றில் இருந்து அழைத்துவரும் நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சக்தி கரம் எடுத்தும், அக்னி சட்டி எடுத்து வந்தும் அம்மனை தரிசனம் செய்து சென்றனர்.

இன்று மாவிளக்கு பூஜை முளைப்பாரி , அம்மனுக்கு சீர் தட்டுகள் கொண்டுவருதல் நிகழ்ச்சி நடக்கிறது. அதனை தொடர்ந்து நாளை அம்மனுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்க உள்ளது. தொடர்ந்து 108 திருவிளக்கு வழிபாடும் நடைபெற உள்ளது.

விழாவின் இறுதியாக அக்னி கம்பம் ஆற்றுக்கு எடுத்து செல்லுதல், மறுபூஜை , மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இந்த திருவிழா கோவை ஆதீனம் ஸ்ரீலாஸ்ரீ பாலமுருகனடிமை சுவாமிகள் அருளாசியுடன் நடைப்பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கெம்பனூர் அண்ணா நகர் ஊர்பொதுமக்கள், விழா கமிட்டியினர் செய்துள்ளனர்.

Tags:    

Similar News