உள்ளூர் செய்திகள்

தரமற்ற உணவு குறித்து ஆன்லைன், செல்போன் மூலம் புகார் அளிக்கலாம்

Published On 2023-05-23 08:10 GMT   |   Update On 2023-05-23 08:10 GMT
  • தமிழ், ஆங்கிலத்தில் அளிக்க நடவடிக்கை
  • நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட்டு புகார்தாரருக்கு ஆய்வறிக்கை அளிக்கப்படும்

வேலூர்:

வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

மக்களின் அன்றாட தேவைகளில் அவசிய மானதாக விளங்கும் உணவுப்பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்திடவும், தரமற்ற மற்றும் கலப்பட உணவுகள் குறித்த பொதுமக்கள் தங்கள் புகார்களை ஆன்லைன் வழியாக மற்றும் செல்போன் வாயிலாக புகார் தெரிவிக்கலாம்.

இதற்காக புதிய இணையதளம் foodsafety.tn.gov.in மற்றும் தமிழ்நாடுஉணவு பாதுகாப்பு துறையின் நுகர்வோர் புகார் செயலி தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இச்செயலி வாயிலாக பொதுமக்கள் தங்கள் புகார்களை மிக எளிமையாக தமிழ் அல்லது ஆங்கிலத்தில் அளிக்கலாம்.

மேலும் இந்த இணைய தளத்தில் பொதுமக்கள் தங்களது புகார்களை புதிய இணையதளம் மற்றும் ஆப் பதிவிறக்கம் செய்து டைப் ஏதும் செய்யாமல் மிக எளிமையாக விவரங்களை தேர்ந்தெடுக்கும் வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தரமற்ற உணவு, கலப்பட செய்யப்பட்ட உணவு உள்ளிட்ட புகார்கள் குறித்த விவரங்களை இதற்கான இணையதளம் மூலமும், கைபேசிசெயலி மூலமும் தெரிவிக்கலாம்.

மேலும் புகார் அளித்த 24 முதல் 48 மணி நேரத்திற்குள் ஆய்வு நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட்டு புகார்தாரருக்கு ஆய்வறிக்கை அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News