உள்ளூர் செய்திகள்

போதை பொருட்களுக்கு எதிராக பள்ளி கல்லூரி மாணவர்கள் ஆன்லைனில் உறுதிமொழி எடுத்து சான்றிதழ் பெறலாம்

Published On 2022-08-10 09:05 GMT   |   Update On 2022-08-10 09:05 GMT
  • போதை பொருள் நுண்ணறிவு பிரிவு இணையதள முகவரியில் வழிவகை செய்யப்பட்டுள்ளது
  • போலீஸ் சூப்பிரண்டு தகவல்

வேலூர்:

வேலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

தமிழ்நாட்டில் போதை மருந்துகள் மற்றும் மனமயக்கப் பொருட்களை தயாரித்தல், பயன்படுத்துதல், கடத்துதல் போன்ற குற்றங்களை எதிர்த்து தீவிர நடவடிக்கைகளை எடுத்து பல்வேறு விழிப்புணர்வு முகாம்களை தமிழக அரசு நடத்திவருகிறது.

இதன் ஒருபகுதியாக அமலாக்க பணியகம் போதை பொருள் நுண்ணறிவு பிரிவு இணையதள முகவரியில் போதை பொருட்களுக்கு எதிராக உறுதிமொழி ஏற்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதில் பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் www.nibcid.org/pledge என்ற இணையதள முகவரியில் தங்களின் சுய விவரங்களான பெயர், பிறந்த தேதி, மின்னஞ்சல் முகவரி, கைபேசி எண், அஞ்சல் குறீயிடு ஆகியவற்றை பதிவு செய்து தமிழ் அல்லது ஆங்கிலத்தில் இணையவழியாக உறுதிமொழி எடுத்துக்கொள்ளலாம்.

சான்றிதழ்

உறுதிமொழி எடுத்தவுடன் தாங்கள் உறுதிமொழி எடுத்ததற்கான சான்றிதழை பதிவிறக்கம் அல்லது தங்களின் சமூக வலைதளத்தில் பகிர்ந்துகொள்ளலாம்.

எனவே வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மேற்கண்ட இணையதள முகவரியில் உறுதிமொழி எடுத்து அச்சான்றிதழை தங்களின் சமூக வலைதளத்தில் பகிர்ந்து மற்றவர்களையும் போதை பொருட்களுக்கு எதிரான உறுதிமொழியை எடுக்க ஊக்குவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News