உள்ளூர் செய்திகள்

வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் தக்காளி ஒரு கிலோ ரூ.150-க்கு விற்பனை

Published On 2023-07-30 08:25 GMT   |   Update On 2023-07-30 08:25 GMT
  • தினசரி வரும் தக்காளியின் வரத்து பாதியாக குறைந்துவிட்டது
  • இல்லத்தரசிகள் கவலை

வேலூர்:

தமிழகத்தில் தக்காளியின் விலை தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த வாரத்தில் கிலோ ரூ.130 வரை விற்கப்பட்ட தக்காளி விலை குறையும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால் மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், தெலுங்கானா ஆகிய மாநிலங்க ளில் பரவலாக பலத்த மழை பெய்து வருவதால் தக்காளி விலை மேலும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

மழையால் பாதிக்கப்பட்டு உள்ள வடமாநிலங்களில் இருந்தும் அங்குள்ள வியாபாரிகளும் ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் அதிகளவில் குவிந்து தக்காளியை கொள்முதல் செய்து வருவதால் தக்காளிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் வேலூர் நேதாஜி மார்கெட்டுக்கு வரும் தக்காளியின் வரத்து குறைந்ததால் விலை அதிகரிக்க தொடங்கியது. வேலூர் மார்கெட்டுக்கு தினசரி வரும் தக்காளியின் வரத்து பாதியாக குறைந்துவிட்டது.

இதனால் சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.150 வரை விற்கப்படுகிறது.

அதேபோல் வெளி மார்கெட்டில் உள்ள காய்கறி, மளிகை மற்றும் சூப்பர் மார்க்கெட் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.150 முதல் ரூ.170 வரை விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி விலை உயர்வால் இல்லத்தரசிகள் கவலை அடைந்து உள்ளனர்.

சமையலுக்கு கிலோ கணக்கில் வாங்கிய தக்காளியை தற்போது ¼ கிலோ, ½ கிலோ என்ற அளவில் வாங்குகின்றனர்.

Tags:    

Similar News