உள்ளூர் செய்திகள்

தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 2,286 வழக்குகளுக்கு தீர்வு

Published On 2023-05-14 07:47 GMT   |   Update On 2023-05-14 07:47 GMT
  • தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 2,286 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
  • ஆணைக்குழு ஊழியர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் செய்திருந்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்

விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி திலகம் தலைமையில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் (ேலாக் அதாலத்) நடந்தது.

விருதநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மாவட்ட கோர்ட்டு மற்றும் விருதுநகர், அருப்புக் கோட்டை, திருச்சுழி, சிவகாசி, சாத்தூர், ராஜ பாயைம் ட்ட சட்டப்பணிக் குழுக்கள் சார்பில் கோர்ட்டு வளாகங்களிலும் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடந்தது.

இதில் நிலுவையில் உள்ள சிவில், கிரிமினல், வாகன விபத்து, காசோலை சம்பந்தப்பட்ட வழக்குகள், வங்கி வாராக்கடன்கள் மற்றும் சிறு வழக்குகள் உட்பட 5 ஆயிரத்து 921 வழக்குகள் பரிசிலினைக்கு எடுக்கப்பட்டது. அதில் சுமார் 2 ஆயிரத்து 286 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.5 கோடியே 8 லட்சத்து 75 ஆயிரத்து 903 பயானளிகளுக்கு கிடைத்தது.

இதில் வழக்கறிஞர்கள். நீதிமன்ற ஊழியர்கள், தன்னார்வ சட்டப்பணியாளர்கள், அரசுத்துறை அலுவலர்கள், அரசு எலும்பு முறிவு மருத்துவர், வங்கி மேலா ளர்கள், இன்சூரன்ஸ் கம்பெனி அலுவலர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு ஊழியர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News