உள்ளூர் செய்திகள்

தூய்ைம தூதுவராக நியமிக்கப்பட்ட பள்ளி மாணவர் உதயனுக்கு ராஜபாளையம் நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

தூய்மை தூதுவராக நியமிக்கப்பட்ட பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ்

Published On 2022-07-13 09:11 GMT   |   Update On 2022-07-13 09:11 GMT
  • தூய்மை தூதுவராக நியமிக்கப்பட்ட பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
  • நல அலுவலர் சரோஜா, நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள், பள்ளி நிர்வாகிகள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் மற்றும் நகராட்சி பணியாளர்கள், தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் பங்கேற்றனர்.

விருதுநகர்

தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி சுத்தமான மற்றும் நீடித்த சுற்றுச்சூழலை உறுதி செய்யும் வகையில் அனைத்து உள்ளாட்சிகளிலும் ஒவ்வொரு மாதமும் 2-ம் மற்றும் 4-ம் சனிக்கிழமைகளில் தீவிர தூய்மை பணிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவர்களிடையே திடக்கழிவு மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு முகாம்கள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்பேரில் கழிவுகளை தரம் பிரித்து தானாக முன்வந்து தினசரி வழங்கி வரும் ராஜபாளையம் நகராட்சி நாடார் ஆரம்ப பள்ளியில் 1-ம் வகுப்பு படிக்கும் மாணவன் நிஷாந்த் (6) என்பவரை பாராட்டி அவர் குடியிருந்து வரும் நேதாஜி தெரு பகுதியின் தூய்மை தூதுவராக நியமனம் செய்யப்பட்டார்.

அதற்கான பாராட்டு சான்றிதழை நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி, மாணவர் நிஷாந்த் படிக்கும் பள்ளிக்கு சென்று மாணவனின் தந்தை முன்னிலையில் சான்று வழங்கி பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். இதேபோன்று ராமம்மாள் ஆரம்பப்பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவர் உதயனையும்(10) பாராட்டி மாணவர் குடியிருந்து வரும் மங்காபுரம் பகுதியின் தூய்மை தூதுவராக நியமனம் செய்யப்பட்டார். அதற்கான சான்றிதழை நகராட்சி ஆணையாளர் மாணவன் படித்து வரும் பள்ளிக்கு சென்று பள்ளி வழங்கி கவுரவித்தார்.

இந்த நிகழ்வுகளில் நகர் நல அலுவலர் சரோஜா, நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள், பள்ளி நிர்வாகிகள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் மற்றும் நகராட்சி பணியாளர்கள், தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News