உள்ளூர் செய்திகள்

வறண்டு கிடக்கும் சடையநேரி கால்வாய்.

வறண்டு கிடக்கும் சடையனேரி கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் விவசாயிகள் கோரிக்கை

Published On 2022-11-08 08:13 GMT   |   Update On 2022-11-08 08:13 GMT
  • உடன்குடி பகுதியில்உள்ள விவசாயிகள் அமைச்சரை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.
  • சடையனேரி கால்வாயில் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

உடன்குடி:

உடன்குடியில்உள்ள ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வந்திருந்தார். அப்போது உடன்குடி பகுதியில்உள்ள விவசாயிகள் அமைச்சரை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழகம் முழுவதும் நல்ல கனமழை பொழிந்து வருகிறது.இந்த நிலையில் வறண்டு கிடக்கும் சடையனேரி கால்வாயில் போர்க்கால அடிப்படையில் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும். உடன்குடி வட்டார பகுதியில் உள்ள விவசாயநிலங்களை பாதுகாக்கவும், விவசாய நிலங்களில் கடல்நீர்மட்டம் புகுந்து விடாமல்தடுக்கவும், உடன்குடி பகுதியில் அனைத்து குளங்களையும் உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்து ேபசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

அப்போது அமைச்சருடன் உடன்குடி யூனியன் சேர்மனும் தி.மு.க மேற்கு ஒன்றிய செயலாளர் பாலசிங், கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ, உடன்குடிகூட்டுறவு சங்க தலைவர் அங்ஸாப் அலிபாதுஷா, உடன்குடிநகர செயலாளரும் உடன்குடி பேரூராட்சி துணைத் தலைவருமான மால் ராஜேஷ், முன்னாள் நகர செயலாளர் ஜான் பாஸ்கர், செட்டியா பத்து ஊராட்சி தலைவர் பாலமுருகன் உட்பட தி.மு.கவினர் பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News