உள்ளூர் செய்திகள் (District)

டேங்கர் லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.

டேங்கர் லாரி மூலம் பொதுமக்களுக்கு தண்ணீர் வினியோகம்

Published On 2023-08-20 09:10 GMT   |   Update On 2023-08-20 09:10 GMT
  • ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது.
  • தண்ணீர் கிடைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுகா, தலைஞாயிறு பேரூராட்சியில் 15 வார்டுகளில் சுமார் 15,000 பேர் வசித்து வருகின்றனர் .இப்பகுதி பொதுமக்களுக்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் நாள்தோறும் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. தலைஞாயிறு பேரூராட்சிக்கு ஒவ்வொரு நாளும் 15 லட்சம் லிட்டர் தண்ணீர் தர வேண்டும்.

ஆனால் தற்போது 4 லட்சம் லிட்டர் குடிநீர் மட்டுமே வருகிறது. வரும் குடிநீரை வைத்து ஒரு நாள் விட்டு ஒரு நாள்தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது பல நாட்கள் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்படுவதால் தண்ணீர்வராமல் பொதுமக்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.

எனவே குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் முழு கொள்ளளவான 15 லட்சம் லிட்டர் தண்ணீர் கொடுக்க வேண்டும். அப்போதுதான் தலைஞாயிறு பேரூராட்சியில் உள்ள மக்களுக்கு முழுமையாக தண்ணீர் கிடைக்கும் .

இது குறித்து பலமுறை குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுக்கு புகார் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் பேரூராட்சியில் தண்ணீர் தட்டுப்பாடு போக்குவதற்காக பேரூராட்சித் தலைவர் செந்தமிழ்செல்வி பிச்சை யன்,செயல் அலுவலர் சரவணன் ஏற்பட்டின் பேரில் வேளாணிமுந்தல், பழையாற்றங்கரை, லிங்கத்தடி, ஓரடியம் புலம் ஜீவாநகர், பெருமாள் கோவில் தெரு உள்ளிட்ட பல இடங்களுக்கு டேங்கர் லாரி மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. எனவே அரசு உரிய நடவடிக்கை எடுத்து தலைஞாயிறு பொதுமக்களுக்கு குடிநீரை வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News