போக்குவரத்து நெரிசலை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
- நகரின் முக்கிய இடங்களுக்கு திருக்கா–ட்டு–ப்பள்ளி வழியாக செல்கிறார்கள்.
- புறவழிச் சாலை அமைக்க ஒப்புதல் பெறப்பட்டு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது.
பூதலூர்:
தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருக்காட்டுபள்ளியை சுற்றியுள்ள 50க்குமேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய தினந்தோறும் திருக்காட்டுப்பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.
திருக்காட்டுப்பள்ளி அருகில் உள்ள பூண்டி மாதா பேராலயம், அன்பில் மாரியம்மன் கோவில் ஆகியவற்றுக்கு செல்லும் பக்தர்களும் திருக்கா–ட்டு–ப்பள்ளி வழியாக செல்கிறார்கள். திருக்காட்டுப்பள்ளியில் 10-க்கும் மேற்பட்ட திருமண அரங்குகள் உள்ளதால் திருமண நாட்களில் திருக்காட்டுப்பள்ளி நகரில் அதிகமான மக்கள் கூடுவது வழக்கமாக உள்ளது.
இதனால் பல நேரங்களில் பிரதான சாலையாக திகழும் பழமார்நேரி சாலை சந்திப்பில் இருந்து பேருந்து நிலையம் வரை வாகன நெரிசல் ஏற்படுகிறது. வாகனங்கள் நீண்ட வரிச யில் நின்றதால் நடந்து செல்வோரும் மிகுந்த சிரம த்திற்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது.
திருக்காட்டுப்பள்ளி நகரில் போக்குவரத்து நெரிசலை தீர்க்க 3.5 கிலோமீட்டர் தூரத்திற்கு புறவழிச் சாலை அமைக்க ஒப்புதல் பெற ப்பட்டு நிலங்கள் கையகப்படுத்த ப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் புறவழிச் சாலை பணிகள் இன்னும் துவங்கப்படவில்லை.
திருக்காட்டுப்பள்ளியில் 3 மேல் நிலை பள்ளிகள், ஒரு உயர் நிலைப்பள்ளி உள்ளது. காலை நேரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் மாணவர்கள் சிக்கி கொண்டு வகுப்பறைக்கு தாமதமாக செல்கின்றனர். எனவே அங்கு போக்குவரத்து போலீசார்நியமித்து போக்கு வரத்தை ஒழுங்கு படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள்கோரிக்கை விடுத்துள்ளனர்.