உள்ளூர் செய்திகள்
புளியங்குடியில் வயலில் பெண் மர்மச்சாவு
- அனிதாவுக்கு உடல்நிலை சரியில்லாததால் திருமணமாகவில்லை.
- மருதநாச்சியார்புரத்தில் உள்ள ஒரு வயலில் அனிதா மர்மமான முறையில் இறந்துகிடந்துள்ளார்.
நெல்லை:
புளியங்குடி அருகே சுப்பிரமணியபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் குருசாமி. இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் அனிதா(வயது 35). இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் திருமணமாகவில்லை. அவரது பெற்றோரும் இறந்துவிட்டதால் தனது சகோதரிகளின் பராமரிப்பில் இருந்து வந்தார்.
நேற்று காலை வீட்டில் தனியாக இருந்த அனிதா திடீரென மாயமானார். இதனால் அவரது தங்கை மகன் அக்கம்பக்கத்தினர் வீடுகளில் தேடி பார்த்தார். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் அனிதா மருதநாச்சியார்புரத்தில் உள்ள ஒரு வயலில் மர்மமான முறையில் இறந்துகிடப்பதாக கிடைத்த தகவலின்பேரில் அவரது உறவினர்கள் அங்கு விரைந்து சென்றனர். புளியங்குடி போலீசாரும் அங்கு சென்று அனிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.