கதம்பம்

இயற்கை வயாகரா

Published On 2024-08-23 03:46 GMT   |   Update On 2024-08-23 03:46 GMT
  • முருங்கையில பல வகை இருக்கு.
  • முருங்கைக்காயை வயாகரானுகூட சொல்வாங்க.

வெந்து கெட்டது அகத்திக்கீரை வேகாமல் கெட்டது முருங்கைக்கீரைனு ஒரு பழமொழி இருக்கு. இதோட அர்த்தம் என்னன்னா முருங்கைக்கீரையை நல்லா வேக வச்சிதான் சாப்பிடணும். ஆனா அகத்திக்கீரையை ரொம்பவும் வேக விடக்கூடாது. வேகவிட்டா அதோட மருத்துவத்தன்மை மாறிப்போயிரும்.

முருங்கையில பல வகை இருக்கு. பொதுவா எடுத்துக்கிட்டா முருங்கையில வேர்ல இருந்து பூ வரைக்கும் எல்லாமே மருத்துவக்குணம் நிறைஞ்சது. வைட்டமின் ஏ, டி, ஈ, கே மட்டுமில்லாம பி 1, பி 2, பி 6&னு அடுக்கிக்கிட்டே போகலாம்.

முருங்கைக்கீரையில இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்தெல்லாம் இருக்கு. பொதுவா முருங்கைக்கீரையை பிரட்டல், பொரியல் செஞ்சி சாப்பிடுவாங்க. பொரியல் செய்யும்போது முட்டையை உடைச்சிவிட்டு நல்லா கிளறி சூட்டோடு சூடா சாப்பிட்டா அதோட பலன் அதிகம்தான்.

முருங்கைக்கீரையைப் பொடியாக அரிஞ்சி, கேரட்டை துருவிப்போட்டு, பசு நெய்யை விட்டு பொரிச்சி, கடைசியாக முட்டையை ஊத்தி கிளறி சாப்பிட்டா தாம்பத்ய உறவுல ஈடுபாடில்லாத ஆம்பிளைங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

முருங்கைப் பூவை அரைச்சி பால்ல கொதிக்க வச்சி பனங்கல்கண்டு சேர்த்து 48 நாள் (ஒரு மண்டலம்) சாப்பிட்டு வந்தா தாம்பத்ய உறவுல விருப்பம் உண்டாகும்.

முருங்கைப் பூவை காய வச்சி பொடியாக்கி அதுல தேன் சேர்த்து ஒரு மண்டலம் சாப்பிட்டாலும் ஆண்மை கூடும். அதுமட்டுமில்லாம நீர்த்துப்போன விந்து கட்டியாகும். இந்த மாதிரி பொண்ணுங்க சாப்பிட்டா அவங்களுக்கு வரக்கூடிய வெள்ளைப்படுதல் சரியாகுறதோட கர்ப்பப்பை ஸ்ட்ராங்காகும்.

முத்திப்போன முருங்கை விதையை எடுத்து காய வச்சி லேசா நெய்யில வதக்கி பொடியாக்கி பால்ல கலந்து சாப்பிட்டா ஆண்மை கூடுறதோட விந்து எண்ணிக்கையும் அதிகமாகும். அதோட நரம்பெல்லாம் முறுக்கேறி உடம்பு கும்முன்னு ஆகிடுமாம்.

முருங்கைக்காய்ல பிஞ்சுக்காயை எடுத்தீங்கன்னா பச்சப்பாம்பு மாதிரி இருக்கும். அதை பால்ல வேக வச்சி ராத்திரி தூங்கப்போறதுக்கு முன்னாடி சாப்பிட்டா ஆண்மைக்குறை உள்ளவங்களுக்கு நிச்சயமா பலன் கிடைக்கும். இதனால முருங்கைக்காயை வயாகரானுகூட சொல்வாங்க.

-மரிய பெல்சின்

Tags:    

Similar News