கதம்பம்

ஆணுக்கு ஒருமொழி பெண்ணுக்கு ஒருமொழி

Published On 2024-08-26 11:19 GMT   |   Update On 2024-08-26 11:19 GMT
  • நைஜீரியாவின் தென்பகுதியில் உள்ள ஒரு பிராந்தியம் தான் உபாங்.
  • இரு இனத்தவருக்கும் இரண்டு மொழிகளைப் பகிர்ந்து கொள்ள விரும்பினார்.

ஒருகுடும்பத்தில் கணவனும் மனைவியும் பேசும் மொழிகள் வெவ்வேறானவை! என்னே ஒரு விசித்திரம்!!

நைஜீரியாவின் தென்பகுதியில் உள்ள ஒரு பிராந்தியம் தான் உபாங். இங்கு ஆண்களும் பெண்களும் வெவ்வேறு மொழிகளைப் பேசுகின்றனர்!

எடுத்துக்காட்டாக, சேனைக்கிழங்கினைப் பெண்கள் மொழியில் '' இருய் '' என்கின்றனர். இதுவே ஆண்கள் மொழியில் '' இடொங் '' என்கின்றனர். இப்படி ஒவ்வொன்றையும் பெண்கள் ஒருவிதமாகவும் ஆண்கள் வேறுவிதமாகவும் கூறுகின்றனர்.

கடவுள் பூமியைப் படைத்தபோது, இரு இனத்தவருக்கும் இரண்டு மொழிகளைப் பகிர்ந்து கொள்ள விரும்பினார். அந்த விருப்பத்தைக் கடவுள் உபாங்கில் இருந்து தொடங்கியதாக, மொழியை ஓர் ஆசீர்வாதமாகப் பார்க்கும் இந்த பழங்குடியினர் தெரிவிக்கின்றனர்.

பெண்களின் மொழியை குழந்தைகள் முதலில் கற்கின்றனர். 10 வயதில் சிறுவர்கள் ஆண்களின் மொழியை கற்பர். பத்துவயதைக் கடந்த ஒரு ஆண்குழந்தை பெண்கள் மொழியைப் பேசினால் அது குறையுள்ள குழந்தையாகவே கருதப்படும்; அதேபோல பத்துவயதைக் கடந்த பெண்குழந்தை, ஆண்கள் மொழி பேசினால் அதுவும் குறையுள்ள குழந்தையாகவே கருதப்படும்.''

-வீரமணி வீராசாமி

Tags:    

Similar News