13 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய அரசுப் பள்ளி பியூன்
- சிறுமி 5 மாதம் கர்ப்பமாக உள்ளது தாய்க்கு தெரியவந்த நிலையில் இந்த கொடூரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
- சிறுமியின் வாயில் துணியை அடைத்து வன்கொடுமை செய்த பங்கஜ், இதை வெளியே சொன்னால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டியுள்ளான்.
உத்தரப் பிரதேசத்தில் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து அரசுப் பள்ளி பியூன் கர்ப்பமாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் பரூகாபாத் Farrukhabad பகுதியைச் சேர்ந்த சிறுமி 5 மாதம் கர்ப்பமாக உள்ளது தாய்க்கு தெரியவந்த நிலையில் இந்த கொடூரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சிறுமி வசித்து வந்த கிராமத்தில் சில மாதங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் இயற்கை உபாதைக்காக ஒதுங்கியபோது, உள்ளூர் கவுன்சில் அரசுப் பள்ளியில் பியூனாக வேலை பார்த்து வந்த பங்கஜ், அமித் என்ற மற்றொரு நபருடன் இணைந்து சிறுமியைக் கடத்தி ஆளில்லாத வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.
சிறுமியின் வாயில் துணியை அடைத்து வன்கொடுமை செய்த பங்கஜ், இதை வெளியே சொன்னால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டியுள்ளான். இந்த விவகாரம் தற்போது தெரியவந்த நிலையில் சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து பங்கஜ் மற்றும் அமித் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.