செய்திகள்

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது- பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா வாக்களித்தார்

Published On 2018-05-12 01:55 GMT   |   Update On 2018-05-12 02:44 GMT
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. பாஜக முதல்வர் வேட்பாளரான எடியூரப்பா வாக்களித்தார்#KarnatakaElections2018
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் 55 ஆயிரத்து 600 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 3.5 அரசு பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதில் ஜெயநகர் தொகுதி பாஜக வேட்பாளர் விஜயகுமார் மரணம் அடைந்ததால் அந்த தொகுதிக்கும், கட்டுக்கட்டாக வாக்காளர் அடையாள அட்டை பறிமுதல் செய்யப்பட்ட ஆர்.ஆர் நகர் தொகுதிக்கும் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 222 தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.

ஷிமோகா அருகே ஷிகார்பூரில் பாஜக முதல்வர் வேட்பாளர் பிஎஸ் எடியூரப்பா வாக்களித்தார். மத்திய அமைச்சரும், முன்னாள் முதல்வருமான சதானந்த கவுடா புட்டூரில் வாக்களித்தார்.

ஆண் வாக்காளர்கள் 2.52 கோடி, பெண் வாக்காளர்கள் 2.44 கோடி, 4,552 மாற்றுப்பாலினத்தவர்கள் என மொத்தம் இந்த தேர்தலில் மொத்தம் 4.96 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர்.



தேர்தலை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் மாநில போலீசார் உள்பட 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இன்று பதிவாகும் ஓட்டுகள் வரும் 15-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. #KarnatakaElections2018
Tags:    

Similar News