செய்திகள் (Tamil News)

சிங்கப்பூரில் இந்து, புத்த கோவில்கள் மற்றும் மசூதியை பார்வையிட்ட பிரதமர் மோடி

Published On 2018-06-02 08:41 GMT   |   Update On 2018-06-02 08:41 GMT
அரசுமுறை பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்குள்ள இந்து, புத்த கோவில்கள் மற்றும் மசூதிக்கு சென்று பார்வையிட்டுள்ளார். #Narendra Modi #Singapore
சிங்கப்பூர் :

அரசு முறை பயணமாக இந்தோனேசியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட மோடி, தற்போது சிங்கப்பூரில் உள்ளார். அங்கு சீனாடவுன் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்ற மோடி அங்கு சுவாமி தரிசனம் செய்தார். இந்த கோவில் கடலூர் மற்றும் நாகபட்டினத்தில் இருந்து சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்தவர்களால் 1827-ம் ஆண்டு கட்டப்பட்டது.

இதைத்தொடர்ந்து, சூலியா எனப்படும் மசூதிக்கு சென்று பார்வையிட்ட அவர், பச்சை நிற ஆடை ஒன்றை மசூதிக்கு பரிசாக வழங்கினார்.


இறுதியாக, புத்த மத கோவிலுக்கு சென்ற மோடி அங்கு அழகிய வேலைப்பாடுகாளால் உருவாக்கப்பட்டிருந்த கோவிலின் உட்கட்டமைப்பை பார்த்து ரசித்தார். இந்திய தூதரகம் மற்றும் இந்திய சிங்கப்பூர் பண்பாட்டு மையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கால சங்கம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.


முன்னதாக, சிங்கப்பூரில் மகாத்மா காந்தியின் அஸ்தி கரைக்கப்பட்ட இடமான காலிஃபோர்ட் பியர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த நினைவு சின்னத்தை மோடி திறந்து வைத்து சிறப்பித்தார். #Narendra Modi #Singapore
Tags:    

Similar News