செய்திகள் (Tamil News)

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு முடித்து தாயகம் புறப்பட்டார் பிரதமர் மோடி

Published On 2018-06-10 10:35 GMT   |   Update On 2018-06-10 10:35 GMT
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி இன்று சீனாவில் இருந்து தாயகம் புறப்பட்டார்.#SCOsummit #ModiInChina
புதுடெல்லி:

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு ஆண்டுதோறும் மாநாடு நடத்தி வருகிறது. இந்த அமைப்பில் ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் உள்பட பல்வேறு நாடுகள் அங்கம் வகிக்கின்றன. கடந்த ஆண்டு இந்த அமைப்பில் இந்தியாவும் தன்னை ஒரு உறுப்பினராக இணைத்துக் கொண்டது.

சுமார் 18 நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டு பேசும் இந்த மாநாடு நேற்றும் இன்றும் நடைபெற்றது. இந்தியாவும் பாகிஸ்தானும் இந்த ஆண்டில் தான் முதல்முறையாக இந்த மாநாட்டில் பங்கேற்றன.

இந்த மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, தனது சிறப்பு உரையை நிகழ்த்தினார். மேலும், சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து இந்தியாவுடனான உறவு குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.

இந்நிலையில் இன்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு முடிவடைந்த நிலையில், சீனாவில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி தாயகம் புறப்பட்டார்.

பிரதமர் மோடி கடந்த ஒரு மாத கால இடைவெளியில் தற்போது 2-வது முறையாக சீனா சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. #SCOsummit #ModiInChina
Tags:    

Similar News