செய்திகள்

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குற்ற விவரங்களை விளம்பரப்படுத்த வேண்டும்- தேர்தல் கமி‌ஷன்

Published On 2018-09-28 05:54 GMT   |   Update On 2018-09-28 05:54 GMT
சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் குற்ற விவரங்களை பத்திரிகை மற்றும் ஊடகங்களில் விளம்பரப்படுத்த வேண்டும் என தேர்தல் கமி‌ஷன் உத்தரவிட்டுள்ளது. #ElectionCommission #SupremeCourt
புதுடெல்லி:

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது மீதான வழக்குகள் மற்றும் குற்ற பின்னணி குறித்த விவரங்களை பத்திரிகை மற்றும் ஊடகங்களில் விளம்பரம் செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. அதை நடைமுறைப்படுத்த தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அதற்கான உத்தரவை மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளது. அதில், சுப்ரீம் கோர்ட் வழி காட்டுதலை தாமதமின்றி உடனடியாக நிறைவேற்ற வேண்டும். சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவை வேட்பாளர்களிடம் உறுதிபடுத்த வேண்டும்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்த பின் தன்மீதுள்ள குற்ற வழக்குகள் மற்றும் வழக்குகளில் பெற்ற தண்டனை விவரங்களை பத்திரிகை மற்றும் ஊடகங்களில் விளம்பரப்படுத்த வேண்டும்.

அதன் மூலம் அவரது வேட்பு மனுவை பரிசீலிப்பதா அல்லது ஒப்புதல் அளிப்பதா என முடிவு செய்து ஆணையம் முன்பு சில நாட்களில் தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள மாநில சட்டசபை தேர்தல்களில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. #ElectionCommission #SupremeCourt
Tags:    

Similar News