இந்தியா (National)
பஞ்சாப்பில் முகக்கவசம்

பஞ்சாப்பில் முகக்கவசம் கட்டாயம்- அரசு உத்தரவு

Published On 2022-04-21 08:30 GMT   |   Update On 2022-04-21 10:08 GMT
கடந்த சில வாரங்களாக கொரோனா குறைந்து கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் பரவல் அதிகரித்துள்ளது.
அமிர்தசரஸ்:

நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் வெகுவாக குறைந்து வந்தது. இதனால் பல மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தின. குறிப்பாக முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என தெரிவிக்கப்பட்டது. இதனால் மக்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை தவிர்த்து வந்தனர். 

இந்நிலையில்  தற்போது டெல்லி, உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் அம்மாநில அரசுகள் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றன. முகக்கவசம் அணிவதையும் கட்டாயமாக்கியுள்ளன.

தமிழ்நாட்டிலும் முகக்கவசம் அணிய வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தினார். இந்நிலையில் பஞ்சாபிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து அம்மாநில அரசு, பொதுமக்கள் பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

Similar News