இந்தியா (National)

அகிலேஷை தடுத்து நிறுத்த தகர வேலிகள்.. உ.பி. அரசியலில் கிளம்பிய பூதம்.. பாஜகவை விட்டு விலகுவாரா நிதிஷ்?

Published On 2024-10-11 11:48 GMT   |   Update On 2024-10-11 11:49 GMT
  • நேற்று இரவே அருங்காட்சியகம் தகர தடுப்புகளால் முற்றிலுமாக மறைக்கப்பட்டு அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
  • கடந்த வருடமும் ஜே.பி நாராயண் சிலைக்கு மரியாதை அகிலேஷ் யாதவ் மரியாதை செலுத்த முடியாமல் தடுத்து நிறுத்தப்பட்டார்

மறைந்த சோசியலிச தலைவர் ஜெயபிரகாஷ் நாராயண் பிறந்த தினம் இன்று [அக்டோபர் 1] கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் அமைந்துள்ள அவரது அருங்காட்சியகத்துக்குச் செல்ல முயன்ற சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் அரசியல் ரீதியாக சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

 லக்னோவில் உள்ள ஜெயபிரகாஷ் நாராயண் இன்டர்நேஷனல் சென்டரின் (ஜெபிஎன்ஐசி) அமைந்துள்ள அவரின் சிலைக்கு அகிலேஷ் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதாக இருந்தது. ஆனால் நேற்று இரவே அருங்காட்சியகம் தகர தடுப்புகளால் முற்றிலுமாக மறைக்கப்பட்டு அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

மேலும் சமாஜ்வாதி கட்சி அலுவலகம் முன்பும் போலீஸ் குவிக்கப்பட்டது. கடந்த வருடமும் ஜே.பி நாராயண் சிலைக்கு மரியாதை அகிலேஷ் யாதவ் மரியாதை செலுத்த முடியாமல் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில் இந்த வருடமும் அவ்வாறு நடந்துள்ளதால் அகிலேஷ் பாஜக அரசு மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பேசியுள்ள அகிலேஷ், பாஜக எப்போதும் சுதந்திரப் போராட்ட இயக்கத்துக்கும், சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும்,எதிரானது, ஜே.பி.நாராயண் சிலைக்கு மரியாதைசெலுத்த விடாமல் சமாஜ்வாதி அலுவலகம் முன்பு தடைகள் போடப்பட்டுள்ளது. காலனியவாதிகளுக்கு ஆதரவளித்து வந்ததனால் பாதைகளை எப்படித் தடுப்பது என்பதை நன்றாக கற்றுக்கொண்டுள்ளனர்.

 

அருங்காட்சியகத்தின் முன் தகரத் தடுப்புகளை வைத்து எதை மறைப்பதற்கு இந்த அரசு முயல்கிறது. இந்த அரசு ஏன் எங்களை தடுக்கிறது? எதற்கு பயப்படுகிறது? எங்களை தடுப்பதால் ஜே.பி. நாராயணனின் சித்தாந்தத்தை வீழ்த்த முடியுமா?

ஒவ்வொரு வருடமும் சோஷலிஸ்டுகள் இங்கு ஒன்றுசேர முடியாதபடி இதை பாஜக செய்து வருகிறது. உ.பி அரசுக்கு அவரைப் பற்றி என்ன தெரியும்?.ஜெ.பி. நாராயண் இயக்கத்தில் இருந்து வந்தவர் பீகார் முதல்வர் நிதிஷ் குமார். இந்த அவமரியாதையைக் கண்டித்து நிதிஷ் குமார் பாஜகவின் என்டிஏ கூட்டணி ஆதரவை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 

 

Tags:    

Similar News