ஜம்மு காஷ்மீர் தேர்தலில் முதல் முறையாக வென்ற ஆம் ஆத்மி உமர் அப்துல்லா கட்சிக்கு ஆதரவு
- தோதா தொகுதியில் களமிறங்கிய ஆம்ஆத்மி வேட்பாளர் வெற்றி பெற்றார்
- ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தது.
ஜம்மு-காஷ்மீரில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களை பிடித்து தேசிய மாநாடு [என்சிபி] மற்றும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது.
தேசிய மாநாடு கட்சி 42 இடங்களிலும் , காங்கிரஸ் 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ.க. 29 இடங்களிலும், ஆம் ஆத்மி ஒரு இடத்திலும், கம்யூனிஸ்ட் கட்சி 1 இடத்திலும், பிற கட்சிகள் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றன. சுயேட்சைகள் ஏழு தொகுதிகளில் வென்றனர் இதில் 4 சுயேட்சைகள் என்சிபி கட்சிக்கு .தேர்வைத்திருந்த நிலையில் தற்போது ஆம் ஆத்மியும் என்சிபி கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
தோதா தொகுதியில் களமிறங்கிய ஆம்ஆத்மி வேட்பாளர் மேக்ராஜ் மாலிக் மொத்தம் 23,228 ஓட்டுகள் பெற்று 18,690 ஓட்டுகள் பெற்ற கஜய் சிங் ரானா ராணாவை 4,538 என்ற வாக்கு வித்தியசாத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். அரியானாவில் படுதோல்வியடைந்த ஆம் ஆத்மி யாரும் எதிர்பாராத அவ்வகையில் ஜம்மு காஷ்மீரில் வெற்றி பெற்றது அரசியல் களத்தில் அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தது.
இந்நிலையில் ஆட்சியமைக்க உள்ள தேசிய மாநாட்டு கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ள ஆம் ஆத்மி, இன்றைய தினம் துணைநிலை ஆளுநரை சந்தித்து உமர் அப்துல்லா தலைமையிலான அரசுக்கான ஆதரவுக் கடிதத்தை ஒப்படைத்துள்ளது.