இந்தியா (National)

அசாமில் மழைக்கு 22 லட்சம் பேர் பாதிப்பு

Published On 2024-07-06 02:01 GMT   |   Update On 2024-07-06 02:01 GMT
  • பிரம்மபுத்ரா உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
  • இதுவரை 62 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

கவுகாத்தி:

அசாமில் இடைவிடாது பெய்த மழையால் மாநிலமே மிதக்கிறது. பிரம்மபுத்ரா உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அபாய அளவை தாண்டி நீர் பெருக்கெடுத்து செல்கிறது. திப்ரூகாரில் பல குடியிருப்புகள் மழை நீரில் மிதக்கின்றன. கடந்த 8 நாட்களாக மின் வினியோகம் இல்லாததால், மக்கள் இருட்டில் வாழ்ந்து வருகிறார்கள். வெள்ள பாதிப்பு பகுதிகளை மாநில முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா நடந்து சென்று பார்வையிட்டார்.

அப்போது அவர், 'திப்ரூகாரில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண வல்லுனர்கள், உள்ளூர்வாசிகளுடன் இணைந்து தீர்வு காணப்படும்' என்று தெரிவித்தார்.

மழை வெள்ள பாதிப்பால் 29 மாவட்டங்களை சேர்ந்த 22 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை 62 பேர் பலியாகி இருக்கிறார்கள். 3 பேர் மாயமாகி இருக்கிறார்கள்.

Tags:    

Similar News