இந்தியா

கோடைகால பயணத்துக்கு நாடு முழுவதும் 4 ஆயிரம் சிறப்பு ரெயில் சேவை

Published On 2023-04-12 03:11 GMT   |   Update On 2023-04-12 03:11 GMT
  • சிறப்பு ரெயில்கள், நாடு முழுவதும் உள்ள முக்கியமான இடங்களை இணைக்கும் வகையில் இயக்கப்பட உள்ளது.
  • தெற்கு ரெயில்வேயில் 20 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.

புதுடெல்லி:

இந்த ஆண்டு கோடை காலத்தில் ரெயில் பயணிகளின் வசதிக்காகவும், பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்கவும் 217 சிறப்பு ரெயில்கள் மூலம் கூடுதலாக 4010 சிறப்பு போக்குவரத்துக்கு இந்திய ரெயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

இந்த சிறப்பு ரெயில்கள், நாடு முழுவதும் உள்ள முக்கியமான இடங்களை இணைக்கும் வகையில் இயக்கப்பட உள்ளது.

அதிகபட்சமாக தென்மேற்கு ரெயில்வேயில் 69 சிறப்பு ரெயில்களும், தென்மத்திய ரெயில்வேயில் 48 சிறப்பு ரெயில்களும், தெற்கு ரெயில்வேயில் 20 சிறப்பு ரெயில்களும் இயக்கப்பட உள்ளன.

இருக்கைகளை முடக்கிவைத்தல், அதிக கட்டணம் வசூலித்தல், இடைத்தரகர் நடவடிக்கை போன்ற முறைகேடுகளை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News