இந்தியா

ஆ.ராசா (கோப்பு படம்)

ஆ.ராசாவின் ரூ.55 கோடி மதிப்புள்ள சொத்து முடக்கம்- மத்திய அமலாக்கத்துறை நடவடிக்கை

Published On 2022-12-22 12:40 GMT   |   Update On 2022-12-22 12:48 GMT
  • 2004-2007 காலகட்டத்தில் ஆ.ராசாவின் பினாமி நிறுவனத்தின் பெயரில் வாங்கப்பட்டதாக தகவல்.
  • 45 ஏக்கர் நிலத்தை தற்காலிகமாக முடக்கியது மத்திய அமலாக்கத்துறை.

முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி தொகுதி எம்.பி.யுமான ராசா, கடந்த 1999 முதல் 2010ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக 27 கோடியே 92 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. அதாவது வருமானத்திற்கு அதிகமாக 575% சதவிகிதம் சொத்து சேர்க்கப்பட்டதாக இந்த புகாரில் கூறப்பட்டது.

கடந்த 2015ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் ராசா மற்றும் அவரது குடும்பத்தினர் உள்பட 16 பேருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து, சென்னை, பெரம்பலூர், திருச்சி உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்திய சிபிஐ, பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியது. இந்த நிலையில் 2004-2007 காலகட்டத்தில் மத்திய மந்திரியாக ஆ.ராசா இருந்த போது பினாமி நிறுவனத்தின் பெயரில் கோவையில் வாங்கப்பட்ட ரூ.55 கோடி மதிப்புள்ள 45 ஏக்கர் நிலத்தை மத்திய அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

Tags:    

Similar News