இந்தியா (National)

தொழிலாளிக்கு போன் வாங்க `கியூ-ஆர் குறியீடு' மூலம் நிதி திரட்டிய வாலிபர்

Published On 2024-07-19 09:38 GMT   |   Update On 2024-07-19 09:38 GMT
  • பொதுமக்களிடம் நிதி திரட்டும் நடவடிக்கைகள் பல இடங்களில் நடக்கிறது.
  • டி-ஷர்ட் அணிந்து நிதி திரட்டிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நல்ல நோக்கத்திற்காக 'கிரவுட் பண்டிங்' முறையில் பொதுமக்களிடம் நிதி திரட்டும் நடவடிக்கைகள் பல இடங்களில் நடக்கிறது.

இந்நிலையில் டெல்லியில் ஒரு வாலிபர் 'கியூ-ஆர்' குறியீடுடன் கூடிய டி-ஷர்ட் அணிந்து நிதி திரட்டிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

டெல்லியை சேர்ந்த பூஜா சன்வால் என்ற பெண் கன்னோட் ப்ளேஸ் பகுதியில் ரோகித் சலூஜா என்ற வாலிபர் அணிந்திருந்த 'கியூ-ஆர்' டி-ஷர்ட்டை பார்த்தார்.

அதில், உத்தர பிரதேசத்தை சேர்ந்த சோனு என்ற முடிதிருத்தும் தொழிலாளியின் செல்போனை யாரோ திருடிவிட்டனர். இது அவரை மிகவும் வருத்தப்படுத்தியது. யாரிடமும் முரட்டுதனமாக பேசாத, அன்பான உள்ளம் கொண்ட அவரது முகத்தில் புன்னகையை வரவழைக்க புதிய போன் வாங்கி கொடுக்க நிதி திரட்டுகிறேன் என கூறப்பட்டிருந்தது.

பூஜா சன்வாலின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகிய நிலையில், சுமார் 37 பேர் அவருக்கு நிதியுதவி செய்தனர். இந்த பதிவை பார்த்த ஒரு பயனர், முடிதிருத்தும் நபரை கவனித்து கொள்வதற்காக அவரை மதிக்க வேண்டும் என பதிவிட்டிருந்தார். இதற்கிடையே ஒரு நிறுவனம் அந்த முடி திருத்தும் தொழிலாளிக்கு புதிய போனை வழங்கி உள்ளது.

Tags:    

Similar News