இந்தியா (National)

சினிமாவை விட அரசியலுக்கு தான் முன்னுரிமை- நடிகை ஜெயசுதா பேட்டி

Published On 2023-08-03 04:46 GMT   |   Update On 2023-08-03 05:23 GMT
  • கடந்த 2014-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
  • பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சித் திட்டங்களால் ஈர்க்கப்பட்டு பாஜகவில் இணைந்துள்ளேன்.

திருப்பதி:

தமிழ் திரையுலகில் 1970-ம் ஆண்டுகளில் அறிமுகமானவர் நடிகை ஜெயசுதா. இவர் 'அரங்கேற்றம்', 'சொல்லத்தான் நினைக்கிறேன்', 'நான் அவனில்லை', 'அபூர்வ ராகங்கள்' உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ள இவர் 2009-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் செகந்திராபாத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன் பின் கடந்த 2014-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

அண்மையில் விஜய் நடிப்பில் வெளியான 'வாரிசு' படத்தில் அவருக்கு தாயாக நடித்திருந்தார்.

இந்த நிலையில் நடிகை ஜெயசுதா பாஜ.க. தேசிய பொதுச் செயலாளர் தருண் சுக் மற்றும் தெலுங்கானா தலைவர் ஜி.கிஷன் ரெட்டி ஆகியோர் முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சித் திட்டங்களால் ஈர்க்கப்பட்டு பாஜகவில் இணைந்துள்ளேன். இனிவரும் காலங்களில் சினிமாவை விட அரசியலுக்கு தான் முன்னுரிமை அளிப்பேன் என்றார்.

Tags:    

Similar News