இந்தியா

8 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை - 12 வயது மகனை காப்பாற்ற முயன்ற தந்தை கைது

Published On 2024-07-17 04:30 GMT   |   Update On 2024-07-17 05:46 GMT
  • இன்னும் சிறுமியின் உடலை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
  • கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளதாக ஆந்திர உள்துறை அமைச்சர் அனிதா தெரிவித்தார்.

ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டத்தில் 8 வயது பள்ளி சிறுமி 12 மற்றும் 13 வயதுடைய 3 சிறுவர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடலை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் மூன்று மாணவர்களும் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக மற்றொரு அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி கைதான மாணவர்கள் மொபைலில் ஆபாச படம் பார்த்து, அதே போன்ற செயலில் ஈடுபட திட்டம் தீட்டியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து கடந்த 7-ந்தேதி பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை, அதே பகுதியைச் சேர்ந்த 6 மற்றும் 7 ஆம் வகுப்பு படிக்கும் 12, 13 வயதுடைய மாணவர்கள் 3 பேர் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்தனர். சிறுமி இச்சம்பவத்தை வெளியே கூறிவிடுவாள் என்று பயந்து சிறுமி கழுத்தை நெரித்து கொலை செய்தனர்.

பிறகு, சிறுமியின் உடலை கால்வாயில் மறைத்து வைத்தனர். சிறுமி உயிரிழந்ததால் பதற்றம் அடைந்த மாணவர்கள் தங்களது தந்தையிடம் நடந்ததை கூறியுள்ளனர். இதையடுத்து மாணவரின் தந்தை மற்றும் உறவினர் ஒருவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பிறகு உயிரிழந்த சிறுமியின் உடலை இருசக்கர வாகனத்தில் வைத்து, கிருஷ்ணா நதிக்கு எடுத்துச் சென்றனர்.

அங்கு வைத்து, சிறுமியின் உடலில் கல்லை கட்டி சடலத்தில் நதியில் வீசியுள்ளனர். இன்னும் சிறுமியின் உடலை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

"குற்றச்சாட்டில் ஈடுபட்டபவர்கள் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். டிரோன், தண்ணீரில் இயங்கும் கேமரா, தேசிய பேரிடர் மீட்பு படை உதவியோடு சிறுமி உடலை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. உடல் கிடைக்கும் வரை தேடும் பணிகள் தொடரும்," என்று எஸ்பி ஆதிராஜ் சிங் ரானா தெரிவித்தார்.

முன்னதாக, கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளதாக ஆந்திர உள்துறை அமைச்சர் அனிதா தெரிவித்தார்.

Tags:    

Similar News