இந்தியா

அடுக்கடுக்காக கேள்வி கேட்கிறார் - விவாகரத்து செய்வதற்கான காரணம் கூறும் பெண்

Published On 2024-11-13 10:14 GMT   |   Update On 2024-11-13 10:14 GMT
  • அடுக்கடுக்கான கேள்விகளை கேட்பதை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என தெரிவித்துள்ளார்.
  • பெண்ணின் பதிவு பயனர்களிடையே பேசுபொருளாகி உள்ளது.

இன்றைய காலக்கட்டத்தில் தம்பதிகள் பலரிடம் சகிப்புத் தன்மையும், விட்டுக்கொடுத்து செல்லும் மனப்பான்மையும் குறைந்து வருகிறது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்படுவதால் அற்ப காரணங்களை கூறி விவகாரத்து பெறுகின்றனர்.

இந்த நிலையில், அதிகமான கேள்விகள் கேட்பதை காரணமாக கூறி 25 ஆண்டுகளாக உடன் இருந்த கணவரை விவாகரத்து செய்ய முடிவு செய்திருப்பதாக பெண் ஒருவர் ரெட்டிட் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

வழக்கமாக பயன்படுத்தும் சோப்புக்கு பதில் மற்றொன்றை மாற்றி உபயோகப்படுத்தினால் கூட, "ஏன் மாற்றினாய்? இதை தேர்ந்தெடுக்க என்ன காரணம்? இத்தனை சோப்புகள் இருக்கும்போது இதை ஏன் தேர்ந்தெடுத்தாய்?" என அடுக்கடுக்கான கேள்விகளை கேட்பதை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என தெரிவித்துள்ளார்

அப்பெண்ணின் பதிவு பயனர்களிடையே பேசுபொருளாகி உள்ளது.

Tags:    

Similar News