இந்தியா

அசாமில் கடும் வெள்ளம்- 4 லட்சம் போ் பாதிப்பு

Published On 2024-06-22 04:05 GMT   |   Update On 2024-06-22 04:05 GMT
  • கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் கரீம்கஞ்சில் வசிக்கும் 2.5 லட்சம் பேர் பாதிப்புக்குள்ளாயினா்.
  • பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக 100-க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கவுகாத்தி:

அசாமில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளத்தில் சிக்கி 4 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அந்த மாநிலத்தில் உள்ள கோபிலி, பராக், குஷியாரா ஆகிய முக்கிய நதிகளில் நீரோட்டத்தின் அளவு அபாய கட்டத்தை தாண்டி பாய்கின்றன. அசாம் மாநிலத்தில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, பஜாலி, பக்சா, கரீம்கஞ்ச் உள்ளிட்ட 19 மாவட்டங்களை வெள்ள நீா் சூழ்ந்துள்ளது. அதில் சிக்கி 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

அந்த மாவட்டங்களில் உள்ள சாலைகள், பாலங்கள் உள்ளிட்டவை பெருமளவில் சேதமடைந்துள்ளன. இதனால் அங்கு அத்தியாவசிய சேவைகள் முற்றிலுமாக முடங்கியுள்ளன. மேலும், அங்கு அடுத்த சில நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் கரீம்கஞ்சில் வசிக்கும் 2.5 லட்சம் பேர் பாதிப்புக்குள்ளாயினா். இந்த ஆண்டு கனமழை, வெள்ளம், இடி மின்னல் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 36-ஆக உயா்ந்துள்ளதாக அந்த மாநில அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக 100-க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், 14,000-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கி உள்ளனா்.

Tags:    

Similar News