இந்தியா

மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமின்: மேடையிலேயே தேம்பி அழுத டெல்லி அமைச்சர் அதிஷி

Published On 2024-08-09 10:43 GMT   |   Update On 2024-08-09 10:43 GMT
  • டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் துணை முதல் மந்திரி பதவியை மணீஷ் சிசோடியா இழந்தார்.
  • இந்த விவகாரத்தில் சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் அவரை கைதுசெய்து திகார் சிறையில் அடைத்தது.

புதுடெல்லி:

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் துணை முதல் மந்திரி பதவியை மணீஷ் சிசோடியா இழந்தார். இந்த ஊழல் விவகாரத்தில் அவரை சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் கைது செய்து திகார் சிறையில் அடைத்தது.

இந்த வழக்கில் ஜாமின் கோரி சுப்ரீம் கோர்ட்டில் சிசோடியா தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்கினர். அவர் வெளிநாடு செல்வதை தவிர்க்கும் நோக்கில் பாஸ்போர்ட்டை ஒப்படைக்கும்படி உத்தரவிட்டனர். ஜாமின் காலத்தில் சாட்சியங்களை கலைக்கும் செயலில் சிசோடியா ஈடுபடக் கூடாது எனவும் தெரிவித்தனர்.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் நடைபெற்ற விழாவில் டெல்லி அமைச்சர் அதிஷி கலந்துகொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், பொய்யான வழக்கில் மணீஷ் சிசோடியா அகப்பட்டு சிறை செல்ல நேர்ந்தது. தற்போது ஜாமினில் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இன்று உண்மை வென்றது, கல்வி வென்றது, குழந்தைகள் வென்றுள்ளனர் என தெரிவித்தார்.

மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமின் கிடைத்ததை கூறுகையில், அமைச்சர் அதிஷி மேடையில் தேம்பி தேம்பி அழுதது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

இந்த வழக்கில் சுமார் 17 மாதம் கழித்து சிசோடியாவுக்கு ஜாமின் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Tags:    

Similar News