இந்தியா
பாபர் மசூதி இடிப்பு வழக்கு: அத்வானி உள்ளிட்டோரின் விடுதலைக்கு எதிரான மனு தள்ளுபடி
- சிபிஐ நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது
- இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அலகாபாத்:
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, உமாபாரதி, முரளி மனோகர் ஜோஷி, சாத்வி ரிதாம்பரா, நிரித்ய கோபால் தாஸ் உள்ளிட்ட 32 பேரையும் விடுதலை செய்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து அயோத்தியாவைச் சேர்ந்த இரண்டு இஸ்லாமியர்கள் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்ததுடன், சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்தனர்.