இந்தியா (National)

வெப்ப அலையால் பாதிக்கப்பட்ட குரங்கை காப்பாற்றிய போலீஸ் அதிகாரி

Published On 2024-05-31 11:01 GMT   |   Update On 2024-05-31 11:01 GMT
  • வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
  • வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் போலீஸ்காரரை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

வட இந்திய மாநிலங்கள் சிலவற்றில் வரலாறு காணாத வெப்ப அலையால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். குறிப்பாக பஞ்சாப், அரியானா, சண்டிகர், டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் வெப்ப அலை வீசி வருகிறது.

இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள புலந்த் சாகர் பகுதியில் உள்ள போலீஸ் நிலைய வளாகத்தில் வெப்ப அலையால் பாதிக்கப்பட்ட ஒரு குரங்கு சுயநினைவற்ற நிலையில் கிடந்துள்ளது. இதைப்பார்த்த போலீஸ் அதிகாரி ஒருவர் அந்த குரங்கிற்கு பல முறை தண்ணீர் கொடுத்துள்ளார்.

மேலும் சி.பி.ஆர். செய்து குரங்கின் உயிரை காப்பாற்றி உள்ளார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் அந்த போலீஸ்காரரை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


Tags:    

Similar News