இந்தியா

பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாமல் நடந்த பெண் டாக்டரின் திருமணம்- வீடியோ வைரல்

Published On 2024-06-08 03:46 GMT   |   Update On 2024-06-08 03:46 GMT
  • திருமணத்திற்கு வந்தவர்களுக்கு வழங்கிய பரிசு பொருட்களும் நூலால் நெய்யப்பட்ட கைப்பையில் கொடுத்தோம்.
  • வீடியோ 70 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்த நிலையில் பயனர்கள் பலரும் பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

பெங்களூருவை சேர்ந்த பெண் டாக்டரான பூர்வி பட் தனது திருமணம் குறித்து இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், விழா நடைபெறும் இடத்தை பொறுத்தவரை மாம்பழம் மற்றும் தேங்காய் இலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மணமக்களின் திருமண மாலைகளில் பிளாஸ்டிக் இணைப்புகள் இல்லாத பூக்கள் மற்றும் பருத்தி நூல்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தன.

இந்த வீடியோவுடன் பூர்வி பட்டின் பதிவில், எனது திருமணம் பூஜ்ய அளவில் பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாமல் நடைபெற்றுள்ளது. திருமண மேடையை நாங்கள் கரும்பால் வடிவமைத்தோம். இதன்மூலம் திருமணம் முடிந்த பிறகு அதனை கால்நடைகளுக்கு உணவாக கொடுத்தோம். இதே போல திருமணத்தில் பரிமாறப்பட்ட உணவின் போதும் வாழை இலை மற்றும் எவர்சில்வர் பாத்திரத்தில் தண்ணீர் பரிமாறப்பட்டது.

திருமணத்திற்கு வந்தவர்களுக்கு வழங்கிய பரிசு பொருட்களும் நூலால் நெய்யப்பட்ட கைப்பையில் கொடுத்தோம். இதன் மூலம் பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாமல் எனது திருமணம் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. எங்கள் குடும்பங்களின் ஒத்துழைப்பால் தான் எனது கனவு சாத்தியமாகி உள்ளது என கூறி உள்ளார்.

அவரது இந்த வீடியோ 70 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்த நிலையில் பயனர்கள் பலரும் பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Full View

Tags:    

Similar News